ஊருபொக்க ஹுலங்கந்த ஹிகொட பிரதேசத்தில் வர்த்தகர் ஒருவரின் சொத்துக்களை கொள்ளையிட பயன்படுத்திய கார் மற்றும் கொள்ளையிடப்பட்ட சுமார் ஒரு கோடி ரூபா பணம் மற்றும் தங்க நகைகள் மற்றும் மூன்று கையடக்க தொலைபேசிகள் உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வலஸ்முல்ல நகரில் வாடகைக்கு வாகனங்களை வழங்கும் நிறுவனத்திடமிருந்தே இந்தக் கார் கைப்பற்றப்பட்டுள்ளது.
ஊருபொக்க பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.