ஜனாதிபதி ரணில்விக்கிரமசிங்க இன்று அழைப்பு விடுத்திருந்த ஸ்ரீலங்கா பொதுஜனபெரமுனவின் மாவட்ட தலைவர்களுடனான சந்திப்பை மாவட்ட தலைவர்கள் புறக்கணித்துள்ளனர் என தகவல்கள் வெளியாகின்றன.
ஜனாதிபதி நேற்று ஸ்ரீலங்கா பொதுஜனபெரமுனவின் அமைச்சர்கள் இராஜாங்க அமைச்சர்கள் மாவட்ட தலைவர்களுடன் சந்திப்பொன்றிற்கு அழைப்பு விடுத்திருந்தார்.
ஆறுமணிக்கு இந்த சந்திப்பு ஆரம்பமானதாகவும் எனினும் ஒருமணிநேரத்தின் பின்னர் அமைச்சர்களும் நாடாளுமன்ற உறுப்பினர்களும் அங்கிருந்து வெளியேறினர் என அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்த சந்திப்பில் கட்சியின் மாவட்ட தலைவர்கள் கலந்துகொள்ளவேண்டியதில்லை என பொதுஜனபெரமுன தீர்மானித்தாக தகவல்கள் வெளியாகின்றன.
ஜனாதிபதி கட்சியின் மாவட்ட தலைவர்களை அழைத்தமை குறித்து பொதுஜனபெரமுன வட்டாரங்கள் அதிருப்தி வெளியிட்டுள்ளன.
ஜனாதிபதி அலுவலகத்தின் மூலம் கட்சியின் மாவட்ட தலைவர்களிற்கு அழைப்பு விடுப்பதை ஏற்கமுடியாது என கட்சியின் உள்ளக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.