இலங்கைத்திவிலே ஈழத் தமிழர்கள் மீது சிறீலங்கா பேரினவாத அரசு முள்ளிவாய்க்கால் இனவழிப்புக்கு பின்னரும் தற்போது வரை தமிழர் தேசத்தை இலக்கவைத்து தொடற்சியாக நடைபெற்றுவரும் தமிழின அழிப்பிற்கும் நீதி வேண்டி சர்வதேசம் முழுவதும் கால் பதித்து நிற்கும் தமிழ் இளையோர் TYO
அமைப்பின் ஒழுங்குகமைப்பில் இன்று ஐரோப்பிய நேரம் காலை 11 மணியளவில் பெல்ஜியத்தில் அமைந்துள்ள ஐரோப்பிய ஒன்றிய முன்றலில் மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம் ஆனது புலம்பெயர் தமிழர்களின் ஆதரவோடு தற்போது வரை பேரெழுச்சியுடன் நடைபெற்றது.
வரலாற்றுச் சிறப்புமிக்க இந்த போராட்டத்திற்கான ஆதரவுக் கருத்தினையும், ஏனைய ஒழுங்குகளையும் உலகெங்கும் உள்ள தமிழர் ஒருங்கிணைப்புக் குழுக்களான தேசியக் கட்டமைப்புக்கள் செய்து வருகின்றன. இன்றைய போராட்டம் இடம் பெறுவதற்கு முன்னர் போராட்ட ஏற்ப்பாட்டாளர்களின் முக்கிய பிரமுகர்கள் அங்கு அரசமட்ட சந்திப்புக்களை மேற்கொண்டதாகவும்,இச் சந்திப்பின் போது குறிப்பாக சிறிலங்கா அரசினால் தற்போது திட்டமிட்டு நடாத்தப்பட்டு வரும் கட்டமைப்பு சார் இனவழிப்பின் அதிதீவிரம் பற்றி அங்குள்ள அதிகாரிகளுக்கு ஆதாரங்களுடன் எடுத்துரைக்கப்பட்டது.
போராட்டத்தில் பங்கேற்றவர்கள் தமிழ்த் தேசிய இனத்தின் அடையாளமான தேசியக் கொடிகளை கையில் தாங்கிய வாறு உரிமைக்காகவும், நீதிக்காகவும் வான் அதிரக் கோசங்களை எழுப்பியவாறு புலம்பெயர்ந்த உறவுகள் போராட்டத்தில் தன்னெழுச்சியுடன் அணி திரண்டுள்ளனர்.
இந்தப் போராட்டத்தில் யேர்மனி,பிரித்தானியா ,சுவிஸ், பிரான்ஸ் உள்ளிட்ட பல்வேறு ஐரோப்பிய நாடுகளில் இருந்தும் புலம்பெயர்ந்த உணர்வாளர்கள் பல நூறு கிலோ மீற்றர் பயணம் செய்து போராட்டத்தில் பங்கெடுத்திருப்பது நீதிக்கான பயணத்தில் புலம்பெயர்ந்து வாழும் தமிழர்கள் கொண்டிருக்கும் அர்ப்பணிப்பை வெளிப்படுத்தி நிற்பதாக போராட்டத்தில் பங்கேற்ற உணர்வாளர்கள் உணர்ச்சி பொங்க கருத்து வெளியிட்டார்.
ட்டம்.