பாலாற்றில் தடுப்பணை: ஆந்திர அரசுக்கு எதிராக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்

409 0

201607201554577249_paleru-river-dyke-Andhra-Assembly-resolution-against-the_SECVPFபாலாற்றில் தடுப்பணை கட்டும் ஆந்திர அரசுக்கு எதிராக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என ஜி.கே. வாசன் கூறினார்.

மதுரையில் த.மா.கா. நிர்வாகிகளின் கலந்தாய்வு கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் ஜி.கே.வாசன் கலந்து கொண்டு நிர்வாகிகளுக்கு ஆலோசனை வழங்கினார். முன்னதாக அவர் நிருபர்களிடம் கூறியதாவது:–

சட்டமன்ற தேர்தலில் கட்சியின் தோல்வி குறித்தும், அதற்கான காரணம் குறித்து தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்களிடம் கருத்து கேட்கப்பட்டு உள்ளது. வருகிற உள்ளாட்சி தேர்தலில் வெற்றி வாய்ப்புள்ள இடம் மற்றும் கட்சி செல்வாக்கு உள்ள இடங்களில் போட்டியிடுவோம். தேர்தல் நெருங்கும்போது கூட்டணி குறித்து அறிவிக்கப்படும்.

த.மா.கா. சார்பில் பெருந்தலைவர் காமராஜர் பிறந்தநாள் விழா வருகிற 30–ந் தேதி வரை தமிழகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. தமிழக விவசாயிகளுக்கு எதிராக ஆந்திர அரசு பாலாற்றில் தடுணை கட்டி வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் வருகிற சட்டமன்ற கூட்டத் தொடரில் அனைத்து கட்சிகளும் சேர்ந்து தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்.

மீனவர்களின் பிரச்சினையில் மத்திய அரசு மெத்தனம் காட்டாமல் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்கு மாநில அரசும் அழுத்தம் கொடுக்க வேண்டும்.

வங்கி அதிகாரிகள் கொடுத்த நெருக்கடியால் கல்வி கடன் செலுத்த முடியாமல் மதுரை மாணவர் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இது குறித்து சம்பந்தப்பட்ட வங்கி அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். கூடங்குளம் அணுமின் நிலையத்தில் 2–வது அணு உலையில் கிடைக்கும் மின்சாரத்தை அதிகளவு தமிழகத்திற்கு வழங்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.