கிழக்கு மாகாணத்தில் டெங்கு ஒழிப்பு நடவடிக்கை

278 0

கடந்த 3 மாதங்களில் டெங்கு நோயாளர்கள் 20126 பேர் பதிவாகியுள்ளதாக தொற்று நோய் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

இவர்களில் 42.65 வீதமானோர் மேல் மாகாணத்தினை சேர்ந்தவர்கள் என பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதனிடயே,கிழக்கு மாகாணத்தில் டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்த முதலமைச்சர் பணிப்புரை விடுத்துள்ளதாக கிழக்கு மாகாண முதலமைச்சின் செயலாளர் யூ எல் ஏ அசீஸ் தெரிவித்தார்.

கிழக்கு முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட்டின் பணிப்புரைக்கமைய தற்போது சகல உள்ளூராட்சி மன்ற செயலாளர்களுக்கும் தமது பகுதிகளில் டெங்குவை கட்டுப்படுத்துவதற்கான முழுமையான நடவடிக்கைகள் எடுக்குமாறு அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளதாக முதலமைச்சின் செயலாளர் யூ எல் ஏ அசீஸ் குறிப்பிட்டார்.

இதனடிப்படையில் டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகளை தமது நகர மற்றும் பிரதேச எல்லைகளுக்குள் தீவிரமாக முன்னெடுக்கவும் டெங்கு பரவுக்கூடிய அபாயம் உள்ள இடங்களை அடையாளங்கண்டு அவற்றை இல்லாதொழிப்பற்கான நடவடிக்கைகளும் கிழக்கு முதலமைச்சின் செயலாளர்சுட்டிக்காட்டினார்.