ஹம்பாந்தோட்டைக்கு விஜயம் செய்துள்ள அமெரிக்க பிரதிநிதிகள்

260 0
ஹம்பாந்தோட்டைக்கு விஜயம் செய்துள்ள அமெரிக்க பிரதிநிதிகள் குழுவினர், அங்கு பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்றுள்ளனர்.
 அமெரிக்காவின் கடற்படை கப்பலொன்று கடந்த ஆறாம் திகதி ஹம்பாந்தோடடை துறைமுகத்துக்குச் சென்றது.
 இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் அதுல் கேஷாப் உள்ளிட்ட அமெரிக்க பிரதிநிதிகள் குழுவினர் இதன்போது ஹம்பாந்தோட்டைக்கு சென்றுள்ளனர்.
சர்வமத வழிபாட்டுத் தளங்களுக்கு சென்றுள்ள அவர்கள், தெற்கில் பல்வேறு நிகழ்வுகளிலும் ஈடுபட்டதாக இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் அதுல் கேஷாப்பின் டுவிட்டர் தளத்தில் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
இலங்கையின் தென் பிராந்தியத்தின் அபிவிருத்திப் பணிகள் சீனாவால் முழுமையாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
இதற்கு இந்தியா தமது அதிருப்தியை இலங்கை அரசாங்கத்திடம் தெரிவித்து வருவதாகவும் குறிப்பிடப்படுகின்றது.
இந்த நிலையில், ஹம்பாந்தோட்டை துறைமுகத்துக்கு சென்றுள்ள அமெரிக்க கடற்படை கப்பல், எதிர்வரும் 18 ஆம் திகதிவரை அங்கு தரித்து நிற்க உள்ளமை குறிப்பிடத்தக்கது.