பொதுமக்கள் அடையாளம் தெரியாத நபர்களிடம் பணத்தை கொடுத்து ஏமாற வேண்டாம்

179 0

கடலூர் மாவட்டத்தில் பொதுமக்களுக்கு இணைய வழி குற்றங்கள் தடுப்பு விழிப்புணர்வு சைபர் கிரைம் காவல் நிலையம் சார்பில் விழிப்புணர்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பி ரண்டு ராஜாராம் தலைமை தாங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தி தொடங்கி வைத்தார்.

இதில் கடலூர் டவுன் ஹால் எதிரில் விழிப்புணர்வு பதாகைகளை போலீசார் ஆட்டோவின் பின்னால் ஒட்டி விழிப்புணர்வு ஏற்படுத்தினர். அப்போது சமூக வலைத்தளங்களில் உங்கள் புகைப்படங்களை வைக்க வேண்டாம், ரகசிய எண்ணை யாரிடமும் பகிர வேண்டாம்,

லோன் ஆப்பில் லோன் வாங்க வேண்டாம், ஆன்லைன் பார்ட் டைம் ஜாபில் நுழைய வேண்டாம், முகம் தெரியாத நபர்கள் ஆன்லைன் வாயிலாக தொடர்பு கொண்டு பணம் மோசடி செய்யும் நோக்கில் பேசினால் பணத்தை கொடுத்து ஏமாற வேண்டாம் என்றும் மேலும் இணையவழி குற்றம் தொடர்பாக இணையவழி இலவச உதவி எண் 1930 மற்றும் www.cybercrime.gov.in என்ற இணையதளத்திலும் புகார் பதிவு செய்யலாம் என விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

இதில் இணையவழி குற்றப்பிரிவு கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசலு, கடலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு பிரபு, சைபர் கிரைம் இன்ஸ்பெக்டர் கவிதா, புதுநகர் சப்-இன்ஸ்பெக்டர் கதிரவன் மற்றும் போலீசார், ஆட்டோ டிரைவர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.