ஆப்கான் பள்ளிவாசலில் குண்டுவெடிப்பு: 11 பேர் பலி

101 0

ஆப்கானிஸ்தானில் பள்ளிவாசல் ஒன்றுக்குள் நடப்பட்ட குண்டுத் தாக்குதலில் 11 பேர் உயிரிழந்துள்ளனர்.

பதாக்ஷான் மாகாணத்தின் பைஸாபாத் மாவட்டத்தில் நேற்று வியாழக்கிழமை இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. இச்சம்பவத்தில் மேலும் 30 பேர் காயமடைந்துள்ளனர்.

இவ்வாரம் படுகொலைசெய்யப்பட்ட மாகாண பதில் ஆளுநர் நிசார் அஹ்மத் அஹ்மதியின் இறுதிச்சடங்குகளின்போது இந்த குண்டுவெடிப்பு இடம்பெற்றுள்ளது.

ஐஎஸ் இயக்கத்தினால் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக ஆப்கானிஸ்தான் உள்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.

இச்சம்பவத்தில் கொல்லப்பட்டவர்களில் தலிபான் அதிகாரிகளும் அடங்கியுள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாக்லான் மாகாணத்தின் முன்னாள் பொலிஸ் தலைவரும் அவர்களில் அடங்கியுள்ளார்.