கொழும்பு – மட்டு பஸ்ஸில் திருடப்பட்ட பொலிஸ் கான்ஸ்டபிளின் பயணப் பை!

109 0

கல்லடி பொலிஸ் பயிற்சிக் கல்லூரியில் கடமையாற்றும் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரின் சீருடை அடங்கிய பயணப்பை பஸ்ஸில் வைத்து திருடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

பயணப் பையில் இரண்டு சீருடைகள், சேவை ஆவணங்கள், கல்விச் சான்றிதழ்கள்,  பஸ் பயண அனுமதிப்பத்திரங்கள் மற்றும் சாதாரண உடைகள் இருந்ததாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இந்தக் கான்ஸ்டபிள் புதன்கிழமை (7) கொழும்பு கோட்டையிலிருந்து மட்டக்களப்பு பஸ்ஸில் சென்றுள்ளார். இதன்போதே  ஆசனத்தின் கீழ் பகுதியில் வைக்கப்பட்டிருந்த அவரது பயணப்பை திருடப்பட்டுள்ளது.