டென்மார்க்கில் ” எமது நிலம் எமக்கு வேண்டும்” கவனயீர்ப்பு ஒன்று கூடல்

270 0

கேப்பாப்புலவு மக்கள் போராட்டத்திற்கு ஆதரவாக டென்மார்க்கில் தமிழ் மக்களால் கவனயீர்ப்பு போராட்டம் København Rådhus plads முன்பாக (10.03.17) அன்று நடத்தப்பட்டது. பெருமளவிலான மக்கள் கவனயீர்ப்பு போராட்டத்தில் பங்கு கொண்டனர். சிங்கள இராணுவத்தாலும், இராணுவத்தின் அருவருடிகளாலும் எமது மக்களுக்கு கொலை அச்சுறுத்தல்கள், காரணமற்ற கைதுகளுக்கு உள்ளாகிய போதிலும் தமது உறுதியான நிலைப்பாட்டிலிருந்து பின்வாங்காமல் தொடர்ந்து பெண்கள், முதியவர்கள் ,மாணவர்கள் ,குழந்தைகளென உறுதியோடு போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.

டென்மார்க்கில் வாழும் எம் உறவுகளும் தமது உறவுகளின் போராட்டத்திற்கு வலுச்சேர்கும் வகையில் தமது பங்களிப்பைச் செய்திருந்தனர். சிங்கள அரசு எம்மக்களின் காணிகளை விடுவிக்கும் வரை எம்மக்களுக்கு ஆதரவு வழங்குவோம். தமிழீழத் தாயகத்தில் எங்களின் சொந்த மண்ணை மீட்டெடுக்க அழுத்தம் கொடுக்குமாறு வலியுறுத்தி வெளிநாட்டு அமைச்சுக்கும், பாராளமன்றத்திற்கும் மகஐர் கொடுக்கப்பட்டது . ” எமது நிலம் எமக்கு வேண்டும்” கவனயீர்ப்பு போராட்டமானது ”

தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்”என்னும் தாரகமந்திரத்துடன் நிறைவு பெற்றது.