உண்ணும் உணவுகளிலும்கூட மைக்ரோ பிளாஸ்டிக் உள்ளதாகவும், பிளாஸ்டிக் மோகத்தால் நம்மை நாமே அழித்துக் கொண்டி ருக்கிறோம் எனசுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் தெரிவித்துள்ளார்.
உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு மாசு கட்டுப் பாட்டு வாரியம் சார்பில் சென்னை கிண்டியில் உள்ள அலுவலகத்தில் சுற்றுச்சூழல் விருதுகள் வழங்கும் விழா நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு தமிழ்நாடு மாசுகட்டுப்பாட்டு வாரிய தலைவர் ஜெயந்தி தலைமை வகித்தார். சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர்மெய்யநாதன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார்.
விழாவில் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் ‘மீண்டும் மஞ்சப்பை’ என்ற இணைய தளத்தையும், செல்போன் செய லியையும் அமைச்சர் மெய்யநாதன் தொடங்கி வைத்தார். இச்செயலி மூலம் தமிழகத்தில் பிளாஸ்டிக் விற்பனை செய்யப்படும் இடங்கள் குறித்து பொதுமக்களே துறையின் அதிகாரிகளுக்கு நேரடியாக புகார் தெரிவிக்கலாம்.
மரங்களை வளர்க்க வேண்டும்: நிகழ்ச்சியில் அமைச்சர் மெய்யநாதன் பேசும்போது, “பிளாஸ்டிக் மோகத்தால் நம்மை நாமே அழித்துக் கொண்டிருக்கிறோம். நாம் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் அழிய பல வருடங் கள் ஆகின்றன. இன்றைய கால கட்டத்தில் நாம் உண்ணும் உணவு, சுவாசிக்கும் காற்று என எல்லா வற்றிலும் மைக்ரோ பிளாஸ்டிக் பரவியுள்ளன.
உலக வெப்பமயமாதலை தடுக்க மரங்களை வளர்க்க வேண்டும். அந்தவகையில் தமிழக அரசின் சார்பில் கடந்தஆண்டு களில் 2 கோடியே 82லட்சம் மரங்கள் நடப்பட்டுள்ளன. நடப் பாண்டில் 10 கோடி மரங்களை நடுவதற்காக இலக்காக கொண்டு பயணித்து கொண்டிருக்கிறோம்.” என்றார்.
தொடர்ந்து செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: கடந்த 2 ஆண்டுகளில் பெய்தகனமழையால் தமிழகம் பசுமை போர்வைக்குள் வந்திருக்கிறது. நிலத்தடி நீர் பெருகியிருக்கிறது. குப்பைகுளங்கள் அகற்றப்பட்டு நீர்நிலைகள் மீட்கப்பட்டுள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.
நிகழ்வில் தமிழகத்தில் உள்ள 38 மாவட்டங்களில் 92 பேர் தேர்ந் தெடுக்கப்பட்டு, அவர்களுக்கு ‘பசுமை முதன்மையாளர்’ விருது வழங்கப்பட்டது.