கடந்த 3 வருடங்களில் 1163 சட்டவிராேத துப்பாக்கிகள் கைப்பற்றல் – அமைச்சர் டிரான் அலஸ்

91 0

போதைப்பொருள் கடத்தலுடன் சட்டவிராேத துப்பாக்கிகளும் நாட்டுக்குள் கொண்டுவரப்படுகின்றன. விசேட அதிரடிப்படையின் சோதனையின் மூலம் கடந்த 3வருடங்களில் 1163 சட்டவிராேத துப்பாக்கிகள் கைப்பற்றப்பட்டுள்ளன என பொது மக்கள பாதுபாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற வாய்மொழிமூலமான கேள்வி நேரத்தின் போது ஆளும் கட்சி உறுப்பினர் சஞ்ஞீவ எதிரிமான்னவினால் கேட்கப்பட்ட்ட கேள்வியொன்றுக்கு பதிலளிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

நாட்டில் பல்வேறு பகுதிகளில் தற்போது மனித படுகொலைகள் உள்ளிட்ட பாரதூரமான குற்றச்செயல்கள் இடம்பெற்று வருகின்றன.

அதேநேரம் அடிக்கடி மேற்கொள்ளப்படும் வீட்டுக்கொள்ளைகள் தொடர்பான புலனாய்வுகள் உடனடியாக மேற்கொள்ளப்படுவதில்லை.

அதனால் சடுதியாக வியாபித்து வரும் பாதாள உலகக் குழுக்களின் செயற்பாடுகளையும் அவை சார்ந்து இடம்பெறும் கொலைகளையும் தடுப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்படுமா என கேட்ட கேள்விக்கே அமைச்சர் இவ்வாறு பதிலளித்தார்.

இதுதொடர்பாக அவர் தொடர்ந்து பதிலளிக்கையில்,

நாட்டில் அதிகமான சட்டவிராேதங்களின்போது பயன்படுத்தப்படும் துப்பாகிக்கிகளில் அதிகமானவை 30வருட யுத்தத்துக்கு பின்னர் தெற்கு பிரதேசங்களுக்கு வந்தவையாகும்.

அத்துடன் கடல் மார்க்கமாக போதைப்பொருள் கடத்தும்போது அதனுடன் சட்ட விராேதமாக துப்பாக்கிகளும் எடுத்துவரப்படுகின்றன.

அண்மையில் பண்டாரகம பிரதேசத்தில் கைப்பற்றப்பட்ட 192 கிலாே கிராம் ஹெராேயின் போதைப்பொருடன் பிஸ்டோல் ரக துப்பாக்கிகள் 10 கைகப்பற்றப்பட்டிருந்தன. இவ்வாறு தேடுதல், சுற்றிவளைப்புகளின் மூலமே இதனை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க முடியுமாகி இருக்கிறது.

அத்துடன் போதைப்போருள் கடத்தல் மற்றும் கொள்ளைகளை தடுப்பதற்கு  விசேட அதிரடிப்படைகளின் சுற்றிவளைப்பு நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்றார்.

இதேவேளை, எதிர்க்கட்சி உறுப்பினர் அஜித் மான்னப்பெருமவினால் கேட்கப்பட்ட கேள்வியொன்றுக்கு அமைச்சர் பதிலளிக்கையில், பொலிஸ் துறையில் ஆளணி பற்றாக்குறை இருந்து வருகிறது.

அமைச்சர்கள் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டிருக்கும் பாதுகாப்பு அதிகாரிகளைவிட 5ஆயிரத்தி 400க்கும் மேற்பட்ட பாதுகாப்பு அதிகாரிகள் வேறு பிரிவினர்களுக்கு வழங்கப்பட்டிருக்கிறது.

அதனால் இது தொடர்பாக மீளாய்வு செய்து, அவர்களின் எண்ணிக்கையில் குறைப்பு செய்ய முடியுமாக இருந்தால் அதனை முன்னெடுக்க நடவடிக்கை எடுக்க இருக்கிறோம்.

அத்துடன் யுத்தக்காலத்தில் மக்கள் பிரதிநிதிகளுக்கு நவீன ரக துப்பாக்கிகள் வழங்கப்பட்டிருந்தன. அவ்வாறஹ வழங்கப்பட்ட துப்பாக்கிகள் மீண்டும் பெறப்பட்டதா என்ற தகவல்கள் பாதுகாப்பு அமைச்சிடமே இருக்கிறது.

அத்துடன் துப்பாக்கி சம்பவம் ஒன்று இடம்பெற்றால்,  ஆரம்பமாக அந்த துப்பாக்கி எங்கிருந்து வழங்கப்பட்டது என்றே நாங்கள் பார்ப்பாேம்.

அதன் பிரகாரம் கடந்த காலங்களில் இடம்பெற்ற துப்பாக்கி பிரயோகங்களில் அனுமதியளிக்கப்பட்ட துப்பாக்கிகள் எதுவும் பயன்படுத்தப்பட்டதாக எந்த தகவலும் இல்லை என்றார்.