ஒடிசா மாநில புகையிரத விபத்து : தமிழ் தேசிய கூட்டமைப்பு சபையில் அனுதாபம்

83 0

இந்தியா, ஒடிசா மாநிலத்தில் புகையிரத விபத்தில் உயிரிழந்த அனைவருக்கும் தமிழ் மக்கள் சார்பாகவும், நாட்டு மக்கள் சார்பாகவும் உயரிய சபை ஊடாக ஆழ்ந்த அனுதாபத்தை  தெரிவித்துக்கொள்கிறோம் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரன் சபையில் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் இன்று செவ்வாய்க்கிழமை (6) இடம்பெற்ற துறைமுகங்கள், கப்பற்துறை மற்றும் விமான சேவைகள் சட்டத்தின் ஒழுங்குவிதிகள் மீதான விவாதத்தின்போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் உரையாற்றியதாவது,

இந்த ஆண்டில் பதிவான மோசமான விபத்தாகவும், மனித குலம் எதிர்கொண்ட பாரிய அழிவாகவும் இந்த புகையிரத விபத்து பதிவாகியுள்ளது. கொத்துக் கொத்தாக உறவுகள் உயிரிழந்தமை பாரிய வேதனைக்குரியது. இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் உறவினர்களுக்கும் எமது அனுதாபத்தை தெரிவித்துக்கொள்கிறோம்.

இவ்வாறானதொரு பேரவலத்தை நாங்கள் 2009ஆம் ஆண்டு எதிர்கொண்டோம். கொத்துக் கொத்தாக எமது உறவுகள் கொல்லப்பட்டு கண்ட இடங்களில் குழி தோண்டி புதைக்கப்பட்ட வரலாற்றை பார்த்த எமக்கு இந்த விபத்துச் சம்பவம் பாரிய வேதனையளித்துள்ளது என்றார்.