பம்பலப்பிட்டி ரயில் நிலையத்துக்கு அருகில் ட்ரோன் ஒன்றை பறக்கவிட்ட பல்கலைக்கழக மாணவர் ஒருவரை நேற்று திங்கட்கிழமை (5) இரவு விமானப்படையினர் கைது செய்துள்ளனர்.
நுரைச்சோலை பிரதேசத்தில் வசிக்கும் தனியார் பல்கலைக்கழகம் ஒன்றில் கல்வி கற்கும் 22 வயதுடைய மாணவனே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த இளைஞர் ரயில் நிலையம் அருகே ட்ரோன் ஒன்றை பறக்க விட்டுக் கொண்டிருந்தபோது பம்பலப்பிட்டி விமானப்படை சோதனைச் சாவடியின் குழுவினரால் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பின்னர் மேலதிக விசாரணைகளுக்காக பல்கலைக்கழக மாணவனுடன் ட்ரோனும் பம்பலப்பிட்டி பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டது.