கொள்ளைச் சம்பவம் தொடர்பில் முன்னாள் அமைச்சரின் முன்னாள் வாகன சாரதி உட்பட இருவர் கைது!

84 0

கஹதுடுவ பொல்கஸ்ஓவிட்ட பிரதேசத்தில் உள்ள வீடு ஒன்றுக்குச்  சென்று தம்மை  பொலிஸ் உத்தியோகத்தர்கள் எனக் கூறிய  இருவர், வீட்டின்  உரிமையாளரைக் கைது செய்து 160,000 ரூபாவை கொள்ளையடித்துள்ளனர்.

பின்னர்  அவரை மொரட்டுவைக்கு அழைத்துச் சென்று மேலும் 300,000 ரூபாவை ரூபாவை அபகரித்துச் சென்றிருந்தனர்.

இந்தச் சம்பவம் தொடர்பில் பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டின் அடிப்படையில்  இரண்டு வருடங்களின் பின்னர் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டதாக மேல் மாகாண தெற்கு மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினர் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் இருவரில் முன்னாள் அமைச்சர் ஒருவரின் முன்னாள் சாரதியும் அடங்குவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.