நுவரெலியா கிராண்ட் ஹோட்டலில் வெள்ளிக்கிழமை (2) நடைபெற்ற 2023/2024 தேசிய சட்ட மாநாட்டில் உரையாற்றிய அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் அங்கு மேலும் கூறுகையில்,
ஒரு தேசமாக நாம் நெருக்கடியான காலகட்டத்தில் இருக்கிறோம். இது சட்டத்தரணிகள் சமூகத்தை ஒன்றிணைக்கும் மாநாடு மாத்திரமல்ல. நாட்டையும் நாட்டின் பொருளாதாரத்தையும் மீட்பதற்காக கொள்கை வகுப்பாளர்கள், அதிகாரிகள் மற்றும் வர்த்தக சமூகத்தினருக்கு இடையேயான கருத்துப் பரிமாற்றத்தின் தொடக்கமாக இந்த மாநாட்டை நடத்த நாங்கள் முடிவு செய்தோம்.
ஒரு தேசமாக நாம் முன்னேற வேண்டுமானால், சட்டத்துறை தொழில்முனைவின் முக்கியத்துவத்தை அடையாளம் காண்பது முக்கியம்.
மேலும், தொழில் மற்றும் தொழில்முனைவோர் சட்டத்தின் ஆட்சியை ஏற்க வேண்டும். இந்த விடயத்தில் நிரந்தரமான தீர்வுகளை காண்பதில் அரசியல் தலைமைகளையும் ஈடுபடுத்துவது மிகவும் அவசியம். அப்போதுதான் இந்த மாநாட்டின் வெற்றிகரமான முடிவுகளை எம்மால் பெற முடியும் என்றார்.