மகிந்த ராஜபக்ச முன்னர் வசித்த இல்லத்தையே அரசாங்கம் கோட்டாபய ராஜபக்சவிற்கு வழங்கியுள்ளது.
ஸ்டன்மோர் கிரசன்டில் உள்ள வீட்டை கோட்டாபய ராஜபக்சவிற்காக பெற்றுக்கொள்வதற்கு முன்னர் அரசாங்க தலைவர்கள் வெளிவிவகார அமைச்சருடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ளவேண்டியிருந்தது- ஏனெ;றால் அந்த பங்களா வெளிவிவகார அமைச்சிற்கு என ஒதுக்கப்பட்டிருந்ததுஎன தகவல் வெளியாகியுள்ளது.
கோட்டாபய ராஜபக்ச மலலசேகர மாவத்தையில் உள்ள வீட்டில் வசித்து வந்த நிலையிலேயே தற்போது அவருக்கு அரசாங்கம் ஸ்டன்மோர் கிரசன்ட் வீட்டை வழங்கியுள்ளது.மலலசேகர மாவத்தை சத்தம் மிகுந்ததாக காணப்படுவதால் அவர் புதிய இடத்தை கோரியிருந்தார்.
எனினும் அவரது பாதுகாப்பில் எந்த மாற்றங்களும் மேற்கொள்ளப்படவில்லை 100க்கும் மேற்பட்டவர்களை அரசாங்கம் அவரது பாதுகாப்பிற்கு ஒதுக்கியுள்ளது.