எஹலியகொட பன்னில பிரதேசத்தில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு இளைஞர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்தச் சம்பவம் சனிக்கிழமை (03) மாலை இடம்பெற்றுள்ளது.
இந்த சம்பவத்தில் பன்னில பிரதேசத்தை சேர்ந்த 23 வயதுடைய நபரே உயிரிழந்துள்ளார்.
இறந்தவரின் உறவினர்கள் தானசாலை வழங்கத் தயாராகிக்கொண்டிருந்தபோது, குறித்த இளைஞர் அந்த இடத்துக்குச் சென்று தனது பணப்பையில் இருந்த பணத்தை காணவில்லை என்று கூறியபோது தகராறு ஏற்பட்டுள்ளது.
இதன்போது அங்கிருந்த நபர் ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கியதாலேயே இந்தக் கொலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
பொலிஸ் விசாரணையில் உயிரிழந்தவர் போதைக்கு அடிமையானவர் என்பதும் தெரியவந்துள்ளது.
சந்தேக நபர் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், அவரைக் கைதுசெய்வதற்கான மேலதிக விசாரணைகளை எஹலியகொட பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.