ஐ.நா. பொதுச் சபையின் துணைத் தலைவர் பதவி இலங்கைக்கு!

92 0

ஐ.நா பொதுச் சபையின் 78ஆவது கூட்டத் தொடரின் துணைத் தலைவர்களாக ஆசிய – பசிபிக் பிராந்தியத்தைச் சேர்ந்த ஈரான், மலேசியா,
சிங்கப்பூர், இலங்கை, உஸ்பெகிஸ்தான் ஆகிய நாடுகள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன. அதன்படி 2023 செப்ரெம்பர் முதல் 2024
செப்ரெம்பர் வரை ஆசிய பசுபிக் பிராந்தியத்தின் சார்பாக இலங்கை இந்த முக்கியமான பதவியை ஏற்றுக்கொள்கின்றது.
இதன்படி, ஐக்கிய நாடுகள் சபையின் நிரந்தரப் பிரதிநிதி மொஹான் பீரிஸ், ஆசிய பசுபிக் பிராந்தியத்திற்கான 2023 ஆம் ஆண்டு செப்டெம்பர் முதல் 2024 ஆம் ஆண்டு செப்டெம்பர் வரையிலான காலப்பகுதிக்கான பொருத்தமான பதவியை ஏற்கவுள்ளார்.
ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் 78வது கூட்டத்தொடர் செப்டம்பர் 12ஆம் திகதி தொடங்கி செப்டம்பர் 25ஆம் திகதி வரை நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.