சோமாலியாவில் 54 உகாண்டா ராணுவ வீரர்கள் பலி

94 0

சோமாலியாவில் அல்-ஷபாப் பயங்கரவாத அமைப்பி னர் அரசுக்கு எதிராக அடிக்கடி தாக்குதல் நடத்தி வருகிறார்கள். அவர்களை ஒடுக்க ராணுவம் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. மேலும் உகாண்டா நாட்டை சேர்ந்த அமைதி படையும் சோமாலியாவில் தீவிர வாதிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுத்து வருகிறது.

இந்நிலையில் சோமாலியா தலைநகர் மொகடிஷுவில் இருந்து தென்மேற்கே 130 கி.மீ. தொலைவில் உள்ள புலமாரரில் உள்ள பாதுகாப்பு படை தளத்தை குறி வைத்து தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதையடுத்து ராணுவத்தினரும் எதிர் தாக்குதல் நடத்தினர்.

இந்த தாக்குதலில் 54 உகாண்டா வீரர்கள் பலியானார்கள். இது தொடர்பாக உகாண்டா அதிபர் யோவேரி முசெவேனி கூறும்போது, சோமாலியாவில் உள்ள ராணுவ தளத்தில் அல்-ஷபாப் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 54 உகாண்டா அமைதிப்படை வீரர்கள் உயிரிழந்தனர்.

எங்களது வீரர்கள் கடுமையாக போராடி ராணுவ தளத்தை மீண்டும் தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர் என்றனர். இதற்கிடையே ராணுவ தளத்தில் தற்கொலை குண்டு தாக்குதல்கள் நடத்தியதாகவும், 137 வீரர்களை கொன்றதாகவும் அல்-ஷபாப்  அமைப்பு தெரிவித்துள்ளது.