பொசன் பூரணை தினத்தை முன்னிட்டு, அனுராதபுரத்திற்கு இன்று முதல் எதிர்வரும் 05 ஆம் திகதி வரை விசேட பேருந்து சேவைகள் இடம்பெறவுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது.
நாட்டின் முக்கிய நகரங்களில் இருந்து அனுராதபுரம் வரை விசேட போக்குவரத்து சேவைகள் இடம்பெறுவதாக அதன் பிரதி பொது முகாமையாளர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை அனுராதபுரத்திற்கும் கொழும்புக்கும் இடையில் இன்று முதல் 12 விசேட புகையிரத சேவைகள் இடம்பெறவுள்ளதாக ரயில்வே பிரதி பொது முகாமையாளர் கூறியுள்ளார்.