உலக செல்வந்தர்கள் பட்டியலில் இலோன் மஸ்க் மீண்டும் முதலிடம்

84 0

உலகின் மிகப் பெரிய செல்வந்தர்களின் பட்டியலில் இலோன் மஸ்க் மீண்டும் முதலிடம் பெற்றுள்ளார்.

அமெரிக்காவைச் சேர்;ந்த இலோன் மஸ்க், டுவிட்டர் சமூக வலைத்தளம், டெஸ்லா வாகனத் தயாரிப்பு நிறுவனம், ஸ்பேஸ் எக்ஸ் எனும் விண்வெளித்துறை நிறுவனம் ஆகியவற்றுக்கும் உரிமையாளராக விளங்குகின்றமை குறிப்பிடத்தக்கது,

அவரின் சொத்து மதிப்பு 192 பில்லியன் அமெரிக்க டொலர்களாகும். கடந்த ஜனவரி மாதத்தின் பின் அவரின் சொத்து மதிப்பு 55.3 பில்லியன் டொலர்களால் அதிகரித்துள்ளது. டெஸ்லா நிறுவனப் பங்குகளின் பெறுமதி அதிகரித்த நிலையில், இலோன் மஸ்கின் செர்தது மதிப்பு அதிகரித்துள்ளது.

கடந்த டிசெம்பர் மாதத்திலிருந்த  முதலிடத்pல் இருந்த பேர்னார்ட் ஆர்னோல்ட்டின் சொத்து மதிப்பு 187 பில்லியன் டொலர்களாக உள்ளது. அவரின் சொத்து மதிப்பு 24.5 பில்லியன் டொலர்களால் குறைவடைந்துள்ளது.

ஜெப் பெசோஸ், பில் கேட்ஸ் ஆகியோர் முறையே 3 ஆம், 4 ஆம் இடங்களில் உள்ளனர்.