நீதிமன்றத்தினால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டு கடந்த இரண்டு வருடங்களாக பொலிஸாரின் பிடியிலிருந்து தப்பித்து தலைமறைவாகியிருந்த சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
தேடப்படும் குற்றவாளியான வெடிக்கார தொரயலகே விக்டர் விஜேதுங்க கடந்த இரண்டு வருடங்களாக பொலிஸாரிடம் இருந்து தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
எவ்வாறாயினும், அவர் கேகாலை பெலிகல, போதவல பிரதேசத்திலுள்ள தனது சொந்த ஊருக்கு திரும்பியுள்ளதாக கிடைத்த இரகசிய தகவலையடுத்து அவரை கைது செய்ய பொலிஸார் செவ்வாய்க்கிழமை (30) விசேட சுற்றிவளைப்பினை மேற்கொண்டுள்ளனர்.
இந்த நடவடிக்கையின் போது சந்தேக நபர் ஒரு பொலிஸ் சார்ஜன்ட் மீது கத்திக்குத்துத் தாக்குதல் நடத்தியதுடன், தாக்குதலைத் தடுக்க முயன்ற பொலிஸ் கான்ஸ்டபிளும் காயமடைந்துள்ளார். இருப்பினும் சந்தேக நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
காயமடைந்த பொலிஸ் கான்ஸ்டபிள் பெலிகல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், பொலிஸ் சார்ஜன்ட் மேலதிக சிகிச்சைக்காக கேகாலை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார். சந்தேக நபரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கேகாலை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.