50 கிலோ யூரியா உர மூடையின் விலை 9,000 ரூபாவாக குறைகிறது!

89 0

அரசாங்கத்துக்குச் சொந்தமான இரண்டு உர நிறுவனங்களினால் விவசாயிகளுக்கு விற்பனை செய்யப்படும் 50 கிலோ யூரியா உர மூடை ஒன்றின் விலை 9,000 ரூபாவாக குறைக்கப்படவுள்ளதாக  விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். இந்த விலைக் குறைப்பு ஜூன் 15 முதல் அமுலுக்கு வருகிறது.

யூரியா உரத்தின் விலையைக்  குறைப்பது தொடர்பில் இன்று புதன்கிழமை (31) இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

31,500 மெற்றிக் தொன் யூரியா உரம் கொண்ட  உரக் கப்பல் ஒன்று ஜூன் மாதம் ஆரம்ப பகுதியில்  இலங்கைக்கு வரவுள்ளது.

டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதி அதிகரிப்பு மற்றும் உலக சந்தையில் யூரியா உரத்தின் விலை குறைவடைந்துள்ளமை போன்றவற்றின் அனுகூலத்தை விவசாயிகளுக்கு வழங்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டார்.