13 மாவட்டங்களில் குடி நீர் தட்டுப்பாடு

251 0

வறட்சியான காலநிலை காரணமாக 17 மாவட்டங்களை சேர்ந்த 3 இலட்சத்து 20 ஆயிரத்து 461 குடும்பங்களை சேர்ந்த 12 இலட்சத்து 23 ஆயிரத்து 568 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் இதனை தெரிவித்துள்ளது.

இதில் குடிநீர் பிரச்சினைக்கு சுமார் 5 இலட்சத்திற்கும் அதிகமானோர் உள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருகோணமலை , களுத்துறை , கம்பஹா , ஹம்பாந்தோட்டை , அனுராதபுரம் , யாழ்ப்பாணம் , முல்லைத்தீவு , கிளிநொச்சி உள்ளிட்ட 13 மாவட்டங்களில் நேரடி நீர் பிரச்சினை காணப்படுவதாக அந்த நிலையம் மேலும் தெரிவித்துள்ளது.