பௌத்தமதத்திற்கு எதிராக கருத்துக்களை வெளியிட்ட நகைச்சுவைகலைஞர் நடாசா எதிரிசூரியவிற்கு எதிராக நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் சரத்வீரசேகர தெரிவித்துள்ளார்.
அரசமைப்பின் 9 வது பிரிவின் கீழும் இலங்கையின் தண்டனை சட்டத்தின் கீழும் நடாசாவிற்கு எதிராக நடவடிக்கை எடுக்கவேண்டும் என அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
உரிய நடவடிக்கைகள் எடுக்காவிட்டால் ஏற்படக்கூடிய பாதிப்புகள் குறித்து கரிசனை வெளியிட்டுள்ள சரத்வீரசேகர பௌத்தம் அவமதிக்கப்படும் வேளைகளில் அதற்கு தீர்வு காணவேண்டியதன் அவசியத்தை இந்த நாட்டின் பெரும்பான்மை பௌத்தர்களின் உணர்வுகள் வெளிப்படுத்தியுள்ளன எனவும் தெரிவித்துள்ளார்.
அரசமைப்பின் ஏற்பாடுகளும் தண்டனைச்சட்டமும் பௌத்தம் அவமதிக்கப்படும்வேளை அதற்கு எதிரான விதத்தில் நடவடிக்கை எடு;ப்பதற்கான வழிவகைகளை கொண்டுள்ளன எதிர்விளைவுகள் ஏற்படுவதை தடுப்பதற்காக அவற்றை உரிய முறையில் பயன்படுத்தவேண்டும் எனவும் சரத்வீரசேகர தெரிவித்துள்ளார்.
அரகலயபோன்ற சூழ்நிலைகளில் பௌத்தம் அவமதிக்கப்பட்டமை பெரும் கவலையை ஏற்படுத்துகின்றது என தெரிவித்துள்ள சரத்வீரசேகர அரகலயவில் கறுப்புபேப்பரில் வெசாக்கூடுகள் காட்சிப்படுத்தப்பட்டன என குறிப்பிட்டுள்ளார்.
சர்வதேச சக்திகள் அரகலயவை திட்டமிட்டதும் இடதுசாரிகளுடனான அவர்களின் தொடர்புகளும் இலங்கையின் பௌத்த பாரம்பரியம் பௌத்தர்கள் மத்தியிலான ஐக்கியம் குறித்த அவர்களின் நோக்கம் குறித்து கேள்வியை எழுப்பியுள்ளன எனவும் தெரிவித்துள்ள சரத்வீரசேகர அனைத்து சமூகங்களினதும் கௌரவத்தை பேணுவது அவசியமானது எனவும் தெரிவித்துள்ளார்.