முல்லைத்தீவில் இருந்து திருகோணமலை நோக்கிய பயணித்த பேருந்து ஒன்றில் கேரள கஞ்சா போதைப் பொருட்களை கடத்திய ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கண்ணியா பிரதேசத்தின் சோதனை சாவடி ஒன்றில் குறித்த பேருந்து சோதனையிடப்பட்ட போதே அவர் கைதானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்போது அவரிடமிருந்து 9 கிலோ 500 கிராம் நிறை கொண்ட கேரள கஞ்சா போதைப் பொருள் மீட்கப்பட்டுள்ளது.
கைதானவர் 32 வயதுடையவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.