கிழக்கு மாகாண அரச அதிகாரிகள் – இலங்கைக்கான உலக உணவுத் திட்ட நிர்வாகிகளுக்கிடையிலான கலந்துரையாடல்

97 0
கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் தலைமையில் மாகாண பிரதம செயலாளர் மற்றும் அரச அதிகாரிகளுக்கும் உலக உணவுத் திட்டத்தின் இலங்கைக்கான தலைவர் சித்திக் மற்றும் அவரது அதிகாரிகளுக்கும் இடையில் சனிக்கிழமை (27) கொழும்பில் கலந்துரையாடலொன்று இடம்பெற்றுள்ளது.

இதன்போது, கிழக்கு மாகாணத்தில் பொருளாதார பின்னடைவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மூன்று வேளை உணவு வழங்குவதற்கான வேலைத்திட்டத்தை ஆரம்பிப்பது தொடர்பாகவும், இலங்கையில் பெண்தலைமைத்துவ குடும்பங்கள் கிழக்கு மாகாணத்திலேயே அதிகம் காணப்படுவதால், அவர்களுக்காக புதியதொரு வேலைத்திட்டத்தை அறிமுகப்படுத்துவது குறித்தும்  கலந்துரையாடப்பட்டது.

அதனையடுத்து, இத்திட்டங்களுக்கு முழுமையான ஆதரவளிப்பதாக உலக உணவுத் திட்டத்தின் நிர்வாகிகள் தெரிவித்தனர்.

இந்த சந்திப்பில் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான், ஆளுநரின் செயலாளர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.