போரில் பாதிக்கப்பட்ட வடக்கு, கிழக்கு பெண்களுக்கு எதுவும் கிடைப்பதில்லை என முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க குறிப்பிட்டுள்ளார்.
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சிக் காரியாலயத்தில் இன்று இடம்பெற்ற மகளிர் தின நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
போரில் 10 ஆயிரம் மேற்பட்ட பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.அவர்களில் பெரும்பாலானோர்கள் தமிழ் பெண்கள்.முஸ்ஸிம் பெண்களும் உள்ளனர்.
படையினரின் மனைவிமார்களும், பிள்ளைகளும் பாதிக்கப்பட்டுள்ளனர்.படையினரின் மனைவிமார்களுக்கு, படையினரின் சம்பளமாவது கிடைக்கின்றது.ஆனால், வடக்கு, கிழக்கில் உள்ள பெண்களுக்கு ஒன்றும் கிடைக்கவில்லை.இதேவேளை, படையினரின் மனைவிமார்களுக்கு வேறு பிரச்சினைகள் இருக்கின்றன.
இந்தப் பிரச்சினைகளைத் தீர்க்க எவராவது தலைமைத்துவம் வழங்க வேண்டும் என சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க குறிப்பிட்டுள்ளார்.