தொல்பொருள் திணைக்களத்துக்குச் சொந்தமான கடற்படை மற்றும் கடல்சார் அருங்காட்சியகத்தில் பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டிருந்த பாய்மரக் கப்பலுக்கு யாரோ தீ வைத்துள்ளதாக திருகோணமலை துறைமுகப் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இச்சம்பவம் குறித்து, அருங்காட்சியக பொறுப்பாளர் பி.எச்.ஏ.ரூபா, பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.
அருங்காட்சியகத்தின் மேல் தளத்தில் தான் இருந்தபோது, கீழ் தளத்தில் இருந்து புகை வெளியேறி பாய்மரக்கப்பல் தீப்பிடித்ததாக அவர் தெரிவித்துள்ளார்.
தீயினால் பாய்மரக் கப்பலுக்கு சிறிதளவு சேதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.