தனி சிகரட்டை விற்பனை செய்ய முடியாதவாறு சட்ட ஏற்பாடுகளை மேற்கொள்வதற்கான அமைச்சரவைப் பத்திரம் அடுத்த வாரம் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன இதனைத் தெரிவித்துள்ளார்.
சிகரட் பாவனையை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கையாகவே இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட உள்ளது.
ஒருவர் புகைப்பதை சுவாசிப்பதால் வருடாந்தம் 25 ஆயிரம் பேர் உயிரிழக்கிறார்கள்.
அவர்களுள் ஐந்து சதவீதமானோர் சிறுவர்கள் என்று அமைச்சர் ராஜித சேனாரட்ன குறிப்பிட்டுள்ளார்.