இந்தியாவின் முன்னோடியாக இருந்த தமிழக சுகாதார துறை தத்தளிக்கிறது: சி.விஜயபாஸ்கர் குற்றச்சாட்டு

95 0

இந்தியாவில் முதன்மையாகவும், முன்னோடியாகவும் இருந்து வந்த தமிழக சுகாதாரத் துறை தற்போது தத்தளித்துக் கொண்டிருக்கிறது என முன்னாள் சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் எம்எல்ஏ தெரிவித்தார்.

புதுக்கோட்டையில் நேற்று செய்தியாளர்களிடம் அவர் கூறியது: அதிமுக ஆட்சியில் புதியமருத்துவக் கல்லூரிகள் உருவாக்கப்பட்டதுடன், ஏற்கெனவே செயல்பட்டு வந்த கல்லூரிகளில் மாணவர்கள் படிக்கும் சீட்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டு வந்தது. ஆனால், கடந்த 2 ஆண்டுகளில் தமிழகத்தில் புதிதாக ஒரு மருத்துவக் கல்லூரியைக்கூட திமுக அரசு திறக்கவில்லை. அதேபோன்று, ஒரு சீட்டைக்கூட அதிகரிக்கவில்லை.

மாறாக, இருக்கும் நிலையை தக்க வைத்துக்கொள்வதற்கு தடுமாறுகிற அரசாக திமுக அரசு இருந்து கொண்டிருக்கிறது. அதன் விளைவாக, பாரம்பரியமிக்க 3 அரசு மருத்துவக் கல்லூரிகளில் 550 இடங்களை பறிகொடுத்து இருப்பது வேதனைக்கு உரியது.

இந்தியாவில் முதன்மையாகவும், முன்னோடியாகவும் இருந்து வந்த தமிழக சுகாதாரத் துறை தற்போது தத்தளித்துக் கொண்டிருக்கிறது.