துருக்கிய ஜனாதிபதித் தேர்தலில் தையீர் அர்துவான் மீண்டும் வெற்றி

93 0

துருக்கியின் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி தையீப் அர்துவான் வெற்றியீட்டியுள்ளார்.

கடந்த 14 ஆம் திகதி நடந்த முதல் சுற்றுத் தேர்தலில் எந்தவொரு வேட்பாளரும் 50 சதவீத வாக்குகளைப் பெறாதநிலையில் இரண்டாவது சுற்றுத் தேர்தல் நேற்று நடைபெற்றது.

இத்தேர்தலில், ஏகேபி கட்சி வேட்பாளர் தையீப் அர்துவான் 52.14 சதவீத வாக்குகளைப் பெற்றுள்ளார். எதிர்க்கட்சியான சிஎச்பி கட்சியின் வேட்பாளர் கெமல் கிளிட்சதரோலு 47.86 சதவீத வாக்குகளைப் பெற்றுள்ளார்.

2014 ஆம் ஆண்டு முதல் ஜனாதிபதியாக பதவி வகித்து வரும் தையீப் அர்துவானின் பதவிக்காலம்,  இவ்வெற்றியின் மூலம் மேலும் 5 வருடங்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளது.

மீண்டும் தேர்தலில் வெற்றியீட்டிய தையீப் அர்துவானுக்கு ஐநா செயலாளர் நாயகம் அன்டோனியோ குட்டேரெஸுடன் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் உட்பட உலக நாடுகளின் தலைவர்கள் பலர் பாராட்டுத் தெரிவித்துள்ளனர்.