இது தொடர்பில் சீமான் மேலும் தெரிவித்துள்ளதாவது
அடிப்படை வசதிகள் ஏதுமற்று, குறைந்தபட்ச கற்கும் வாய்ப்புகள் கூடக் கிடைக்கப்பெறாத, தமிழ்நாட்டின் வதை முகாமில் வாழ்ந்து வரும் ஈழத்தமிழ் சொந்தங்களுக்கு உதவ வேண்டியது ஒவ்வொரு தமிழரின் கடமையாகும். அந்த வகையில் தனிப்பட்ட முறையில் தாங்கள் செய்த பேருதவி ஒரு குழந்தையின் வாழ்வில் ஒளியேற்றி வைத்த போதிலும், அதனை தமிழ்நாடு அரசே முன்னெடுக்கும்போதுதான் நம்மையே நம்பி வந்துள்ள ஈழச்சொந்தங்கள் அனைவரின் வாழ்விலும் மிகப்பெரிய முன்னேற்றத்தை ஏற்படுத்த முடியும்.
ஆகவே, மாண்புமிகு அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் அவர்கள், தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் கவனத்திற்கு இதனைக் கொண்டுச்சென்று, ஈழத்தமிழர் முகாம்களில் வசிக்கும் அனைத்து குழந்தைகளின் உயர்கல்விச் செலவு முழுவதையும் தமிழ்நாடு அரசே ஏற்றுக்கொள்வதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமெனக் கேட்டுக்கொள்கிறேன்என நாம் தமிழ் கட்சியின் தலைவர் சீமான் தெரிவித்துள்ளார்