வடமாகாணத்தில் 2017 ம் ஆண்டு இன்றுவரை 1572 பேருக்கு டெங்கு நோய் தாக்கம்

278 0
வட மாகாணத்தில் இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் மட்டும்  1572 டெங்கு நோயாளர்களும் 63 எச்1என்1 எனப்படும் பண்டிக் காச்சல் நோயாளர்களும் இனம் கானப்பட்டுள்ளதாக சுகாதாரத் திணைக்கள் தகவல்கள் தெரிவிக்கின்றன.
வடக்கின் 5 மாவட்டங்களிலும் இந்த ஆண்டின் ஆரம்ப காலப்பகுதியில் கடந்த ஆண்டுகளில் கானப்பட்ட இந் நோய்த் தாக்கங்களிலும் விடவும் இந்த ஆண்டு அதிகரித்தே கானப்படுவதாக சுட்டிக்காட்டப்படுகின்றது.

இதன் பிரகாரம் வடக்கில் டெங்கு நோய் அதிக தாக்கம் கானப்படும் மாவட்டமான யாழ்ப்பாணத்தில் இதுவரை 1168பேர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளபோதிலும் 1027 பேருக்கே உறுதி செய்யப்பட்டுள்ளதோடு எச் 1இ என் 1 எனப்படும் பண்டிக் காச்சலின் அறிகுறிகளுடன் 63 பேர் அனுமதிக்கப்பட்டபோதும் இவர்களில் கர்ப்பவதிகள் சிறுவர்கள் என 25 பேரின் இரத்த மாதிரிகளே ஆய்விற்கு அனுப்பப்பட்டுள்ளது. இதில் 17 பேருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதேநேரம்  முல்லைத்தீவு மாவட்டத்தில் டெங்கு காச்சல் 62 பேரில் இனம் கானப்பட்டபோதிலும் 32 பேரிலேயே உறுதி செய்யப்பட்டுள்ளதோடு எச் 1இ என் 1 எனப்படும் பண்டிக் காச்சல் நோய்த் தாக்கத்திற்கு இலக்கான சந்தேகத்தில் 34பேர் அனுமதிக்கப்பட்டபோதும் 6 பேரே உறுதி செய்யப்பட்டுள்ளனர்.

இதேபோன்று எச்1 இ என் 1 தாக்கம் அதிகம் கானப்படும் கிளிநொச்சி மாவட்டத்தினில் இதுவரை 104 டெங்குத் தொற்றாளர் அனுமதிக்கப்பட்ட நிலையில் 244 எச் 1இ என் 1 எனப்படும் பண்டிக் காச்சல் நோய்த் தாக்கத்திற்கு இலக்கானோர் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் இவர்களில் 39 பேருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதேபோன்று வவுனியா மாவட்டத்தில் டெங்கு நோயாளர் 163 இனம்கானப்பட்டுள்ளதோடு 57 எச் 1இ என் 1 எனப்படும் பண்டிக் காச்சல் நோய்த் தாக்கத்திற்கு இலக்கானோரும் இனம் கானப்பட்டவர்களில் 7 பேருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது

இதேநேரம் வடக்கில் இன்றுவரை எச் 1இ என் 1 எனப்படும் பண்டிக் காச்சல் நோய்த் தாக்கமே அற்ற ஒரேயொரு மாவட்டமாக கானப்படும் மன்னார் மாவட்டத்தினில் 246 டெங்கு நோயாளர்கள் இனம் கானப்பட்டுள்ளனர். இந்த வகையிலேயே வடக்கில் இந்த ஆண்டின் முதல் 65 நாட்களிலும் 1572 டெங்கு நோயாளர்களும் 63 எச்1என்1 எனப்படும் பண்டிக் காச்சல் நோயாளர்களும் இனம் கானப்பட்டுள்ளதாக சுகாதாரத் திணைக்கள் தகவல்கள் தெரிவிக்கின்றன.