வெலிக்கடை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பொலிஸ் மேலதிக படைத் தலைமையகத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
பதுளை பிரதேசத்தில் 41 வயதுடைய பெண்ணொருவர் பொலிஸ் காவலில் இருந்த போது சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்தமை தொடர்பில் இந்த இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.
முன்னதாக, இந்த சம்பவம் தொடர்பாக ஒரு பொலிஸ் பரிசோதகர், இரண்டு சார்ஜென்ட்கள் மற்றும் ஒரு பொலிஸ் கான்ஸ்டபிள் ஆகியோர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டனர்.
இச்சம்பவம் தொடர்பாக மேலும் இரண்டு பெண் பொலிஸ் கான்ஸ்டபிள்கள் உட்பட மூன்று கான்ஸ்டபிள்கள் இடமாற்றம் செய்யப்பட்டனர்.
குறித்த பெண் தாக்குதலினால் உயிரிழந்துள்ளதாக உயிரிழந்த பெண்ணின் உறவினர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பாக உள்ளக விசாரணையையும் பொலிசார் ஆரம்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.