தமிழகத்தில் கடல் மீன்வளத்தைப் பேணி காப்பதற்காக 61 நாட்களுக்கு மீன்பிடி தடைக்காலம் அமல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த நாட்களில் மீனவர்களின் வாழ்வாதாரத்திற்காக அரசு நிவாரண உதவி வழங்குகிறது.
அவ்வகையில், இந்த ஆண்டு 14 கடலோர மாவட்டங்களைச் சேர்ந்த மீனவ குடும்பங்களுக்கு மீன்பிடி தடைக்கால நிவாரணமாக தலா 5000 ரூபாய் வழங்கப்படுகிறது. இந்த திட்டத்திற்காக ரூ.89.50 கோடி நிதி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
இதன்மூலம் 1.79 லட்சம் மீனவ குடும்பங்கள் பயன்பெறும். அரசு நிதி ஒதுக்கியதையடுத்து, மீன்பிடி தடைக்கால நிவாரணத்தொகை பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கும் பணி இன்று தொடங்கும்.