குழந்தைகள் இலத்திரனியல் திரைகளை பார்வையிடுவதை தவிர்க்குமாறு உலக சுகாதார ஸ்தாபனம் வேண்டுகோள்

119 0

இரண்டு வயதிற்குட்பட்ட குழந்தைகள் கையடக்க தொலைபேசி, டெப் உள்ளிட்ட இலத்திரனியல் திரைகளை பார்வையிடுவதை தவிர்க்க வேண்டும் என உலக சுகாதார ஸ்தாபனம் வலியுறுத்தியுள்ளது.

குறித்த வயது பிரிவுடைய குழந்தைகள் இலத்திரனியல் திரைகளை பார்வையிடுவதன் பாதிப்பு பத்து அல்லது 12 வயதில் தாக்கம் செலுத்தும் என்று டொக்டர் தர்ஷனி ஹெட்டியாராச்சி தெரிவித்தார்.

சமூக ஊடகங்களும் சிறுவர்களின் உளவியல் சுகாதாரமும் எனும் தொனிப்பொருளில் சி.பி.எம். (CBM)  நிறுவனம் நடத்திய விழிப்புணர்பு நிகழ்வின் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டார்.

இலங்கை மன்றக் கல்லூரியில் இந்த நிகழ்வு நடைபெற்றது.  சிறுவர்கள் வீடியோ கேம் விளையாடுவதன் தாக்கம் அவர்களை பெரிதும் பாதிக்கக் கூடும்.

இதேவேளை, சமூக ஊடகங்களில் அதிகளவான நேரத்தை செலவிடும் பிள்ளைகள் தற்கொலை முயற்சிக்கு செல்லும் அபாயம் நிலவுகிறது. இதுவிடயத்தில் பெற்றோர்கள் மிகுந்த கவனம் செலுத்த வேண்டும் என்றும் டொக்டர் தர்ஷனி ஹெட்டியாராச்சி கேட்டுக்கொண்டார்.