உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கான நிதி ஒதுக்கீடுகளை தடுத்து நிறுத்துவது தொடர்பாக நிதி அமைச்சின் செயலாளருக்கு எதிராக பிறப்பிக்கப்பட்ட இடைக்கால உத்தரவு தொடர்பான ரிட் மனுவை நிராகரிக்குமாறு ஐந்து நீதிபதிகள் கொண்ட குழு உச்ச நீதிமன்றத்திடம் சட்டமா அதிபர் கோரிக்கை விடுத்துள்ளார்.
சட்டமா அதிபர் சார்பில் ஆஜரான மேலதிக சொலிசிட்டர் ஜெனரல், ஜனாதிபதி சட்டத்தரணி பிரியந்த நவன, இந்த ரிட் மனு இன்று (26) அழைக்கப்பட்டபோதே இது தொடர்பான அறிவித்தலை விடுத்தார்.