தமிழக அரசு பணியாளர்கள் பங்களிப்பு ஓய்வூதிய திட்டக் கணக்கு தாள்களை நாளை முதல் இணையதளம் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
இதுகுறித்து அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு: பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் தமிழ்நாடு அரசுப் பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்கள் என 5,45,297 பணிபுரிகின்றனர்.
2022-23-ம் ஆண்டுக்கான பங்களிப்பு ஓய்வூதிய திட்டக் கணக்கு தாள்கள் தொகுக்கப்பட்டு மே 26-ம் தேதி காலை 10 மணிக்கு அரசு தகவல் தொகுப்பு விவர மையம் வெளியிடப்பட உள்ளது. அத்துறையின் cps.tn.gov.in/public என்ற இணையதள முகவரியை பயன்படுத்தி தங்களின் பங்களிப்பு ஓய்வூதியத் திட்டக் கணக்குத் தாள்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இவ்வாறு அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.