தினேஷ் ஷாப்டரின் இரண்டாவது பிரேத பரிசோதனை நாளை

92 0

முன்னாள் வர்த்தகர் தினேஷ் ஷாப்டரின் சடலம் இன்று (25) தோண்டி எடுக்கப்பட்டது

தினேஷ் ஷாப்டரின் மரணம் தொடர்பில் விசாரணை நடத்த நியமிக்கப்பட்ட ஐவரடங்கிய விசேட வைத்திய சபை, அவரது மரணத்திற்கான காரணத்தை கண்டறிய அவரது சடலத்தை தோண்டி எடுக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றில் கோரிக்கை விடுத்திருந்தது.

இதன்படி, சடலத்தை தோண்டி எடுப்பதற்கு நீதவான் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளதுடன், விசேட பொலிஸ் பாதுகாப்பின் கீழ் இன்று தோண்டி எடுக்கப்பட்டது.

தினேஷ் ஷாஃப்டரின் மரணம் தற்கொலை என்று முதலில் தெரிவிக்கப்பட்டது, ஆனால் பின்னர் சமர்ப்பிக்கப்பட்ட நிபுணர் அறிக்கையில், அவரது உயிரியல் மாதிரிகள் தவிர, வெளிநாட்டு உயிரியல் மாதிரியும் அடையாளம் காணப்பட்டது.

இதன்படி, கொழும்பு நீதவான் நீதிமன்றத்தினால் நியமிக்கப்பட்ட ஐவரடங்கிய சட்ட வைத்திய நிபுணர் குழு, திரு.ஷாப்டரின் மரணத்திற்கான சரியான காரணத்தைக் கண்டறிய மீண்டும் பிரேத பரிசோதனை நடத்தப்பட வேண்டுமென அண்மையில் நீதிமன்றத்திற்கு அறிவித்திருந்தது.

தினேஷ் ஷாப்டரின் சடலத்தை மீட்பதற்காக பொரளை பொது மயானத்தைச் சுற்றி விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் அமுல்படுத்தப்பட்டன.

சடலம் தோண்டி எடுக்கப்பட்டு, இரண்டாவது உடற்கூற்று பரிசோதனை மேற்கொள்வதற்காக காலி – கராப்பிட்டிய போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

சடலத்தின் இரண்டாவது பிரேத பரிசோதனை நாளை (26) ஆரம்பமாகவுள்ளது.