மகாவலி திட்டத்தால் பறிபோகும் தமிழர் நிலம்

86 0

மகாவலி அதிகார சபையின் செயற்பாடுகள் தமிழர்களின் பூர்விக நிலங்கள் பறிக்கப்பட்டு அது தென்பகுதி மக்களுக்கு வழங்கப்படுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் சார்ல்ஸ் நிர்மலநாதன் தெரிவித்துள்ளார்.

இன்றையதினம்(25.05.2023) நாடாளுமன்றத்தில் உரையாற்றும்போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் தெரிவிக்கையில், இதுமட்டுமன்றி கைப்பற்றப்பட்ட பகுதிகளில் புதிய பிரதேச செயலகமும் உருவாக்கப்பட்டிருக்கிறது.

தற்போது முல்லைத்தீவு மற்றும் மன்னாரில் சுமார் 37 கிராமங்களை மகாவலி வலயத்திற்கு உள்வாங்குவதற்கான முயற்சிகள் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.