”வடக்கு கிழக்கில் தமிழர் வாழும் பிரதேசங்களில் அவர்கள் கண்ணுக்கு தெரியாமல் கட்டமைக்கப்பட்ட இன அழிப்பு நடைபெற்றுக்கொண்டிருப்பதாக” தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார்.
இன்றையதினம்(25.05.2023) நடைபெற்ற நாடாளுமன்ற அமர்வில் உரையாற்றும்போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் தெரிவிக்கையில், ”போரில் தமிழர்கள் அழிக்கப்பட்டதை விட தற்போது மோசமாக அழிக்கப்பட்டு வருகின்றனர்.
வடக்கு கிழக்கில் கிட்டத்தட்ட 200 இற்கும் மேற்பட்ட இராணுவ முகாம்கள் நிறுவப்பட்டுள்ளன. அந்த ஒவ்வொரு இடங்களிலும் ஒவ்வொரு பௌத்த விகாரைகள் அமைக்கப்படுகின்றது” என தெரிவித்துள்ளார்.