தினேஸ் ஷாப்டரின் உடல்மீண்டும் தோண்டி எடுக்கப்படுவதை மன உளைச்சலை ஏற்படுத்துகின்ற போதிலும் நீதிநிலைநாட்டப்படும் என்ற எதிர்பார்ப்பில் அதற்கு ஆதரவளிக்கின்றோம் என ஷாப்டர் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
அறிக்கையொன்றில் அவர்கள் மேலும் தெரிவித்துள்ளதாவது.
எங்கள் அன்புக்குரிய தந்தை சகோதரர் மகன் கணவரின் துயரமான சூழ்நிலையில் இழப்பிலிருந்து நாங்கள் இன்னமும் மீளவில்லை என்பதால் இது எங்களிற்கு மிகவும் நெருக்கடியான காலமாக உள்ளது.அவரது உடல் மீண்டும் தோண்டப்படுவதை பார்ப்பது எங்களிற்கு உணர்வுபூர்வமாக பெரும் மனஉளைச்சலை ஏற்படுத்துகின்றது.
எனினும் உடலை தோண்டவேண்டும் என்ற மருத்துவகுழுவின் தீர்மானத்திற்கு நாங்கள் ஆதரவளிக்கின்றோம், உண்மை வெளிவரும் என நாங்கள் எதிர்பார்க்கின்றோம்.
சட்டஅமுலாக்கல் அதிகாரிகளும் அதிகாரிகளும் இதுவரை முன்னெடுத்துள்ள நடவடிக்கைகளை நாங்கள் பாராட்டுகின்றோம்;, எங்கள் நேசத்திற்குரிய தினேசி;ற்கு நீதிநிலைநாட்டப்படுவதை உறுதி செய்வதற்காக எங்கள் முழுமையான ஆதரவை வழங்குகின்றோம் .