கல்வி பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை தொடர்பில் பாடசாலை அதிபர்களுக்கான அறிவுறுத்தல்!

86 0

கல்வி பொதுத் தராதர  சாதாரண தரப் 2022 (2023) பரீட்சை தொடர்பாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம்  பாடசாலை அதிபர்களுக்கு அறிவித்தல் ஒன்றை விடுத்துள்ளார்.

எக்காரணம் கொண்டும் அதிபர்கள் உரிய பரீட்சைக்கான  அனுமதிப்பத்திரத்தை பரீட்சார்த்திகளுக்கு வழங்காதிருக்கக் கூடாது என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பரீட்சைக்கான  அனுமதிப்பத்திரம்  கிடைக்காத காரணத்தினால் பரீட்சைக்குத் தோற்ற முடியாமல் போனால் அதற்கான முழுப் பொறுப்பையும்  அதிபரே ஏற்க வேண்டும் என பரீட்சை ஆணையாளர் நாயகம் எச். ஜே. எம். சி அமித் ஜயசுந்தர தெரிவித்தார்.