கிணற்றினுள் வீழ்ந்த யானை குட்டி – மீட்பு நடவடிக்கை தீவிரம்

150 0

வவுனியா மடுக்கந்த பகுதியில் யானைக்குட்டி ஒன்று கிணற்றுக்குள் தவறி வீழ்ந்த நிலையில் அதனை மீட்கும் பணிகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

குறித்த பகுதியில் அமைந்துள்ள பயன்படுத்தப்படாத கிணற்றினுள் யானைக்குட்டி ஒன்று  தவறி வீழ்ந்தமையை அவதானித்த கிராமவாசிகள் இது தொடர்பாக  வனஜீவராசிகள் திணைக்களத்திற்கு தகவல் தெரிவித்திருந்தனர்.

சம்பவ இடத்திற்கு சென்ற வனஜீவராசிகள் திணைக்களத்தின் உத்தியோகத்தர்கள் யானைக்குட்டியை மீட்கும் நடவடிக்கையினை முன்னெடுத்து வருகின்றனர்.

இதேவேளை குறித்த குட்டியின் தாய்யானை அந்தபகுதியில் உலாவித்திரிவதால் மீட்பு பணியில் தொய்வுநிலை ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.