மதுபானத்தின் விலையை குறைப்பது தொடர்பில் எவ்வித தீர்மானமும் எடுக்கப்படவில்லை என நிதியமைச்சு தெரிவித்துள்ளது.எதிர்வரும் ஜூன் மாதம் முதல் மதுபானத்தின் விலை குறையும் என சமூக வலைத்தளங்களில் பரவி வரும் வதந்திகளில் உண்மையில்லை என நிதி அமைச்சின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.இவ்வருடம் ஜனவரி மாதம் கலால் வரி அதிகரிக்கப்பட்டுள்ளதால், இலக்கு உற்பத்தி வருமானம் 30 சதவீதம் குறையும் .
வழமையான மதுபான விற்பனை வீழ்ச்சியடைந்துள்ள நிலையில், நுகர்வோர் சட்டவிரோத போதைப்பொருளை நாடுவதாகவும், இதனால் அரசாங்கத்தின் வருமானம் குறைவடைந்து மக்களின் ஆரோக்கியம் சீர்குலைந்து வருவதாகவும் நிதியமைச்சின் சிரேஷ்ட அதிகாரி மேலும் தெரிவித்துள்ளார்.