வவுனியா- பாலமோட்டை பகுதியில் கோவில் குஞ்சுக்குள கிராமத்தில் வியக்க வைக்கும் வகையில் மாடு, கன்றுகுட்டி ஒன்றினை ஈன்றுள்ளது.
அதாவது மாடு ஒன்று எட்டு கால்களுடன் கன்றுகுட்டி ஒன்றினை ஈன்றுள்ளது.
குறித்த மாடு எட்டு கால்களுடன் கன்று ஒன்றினை பிரசவித்த நிலையில் கன்று தற்போதும் ஆரோக்கியமாக இருப்பதாகவும் அதற்கு எவ்வித பாதிப்பும் இல்லை எனவும் மருத்துவ பரிசோதனைகளை மேற்கொண்ட கால்நடை வைத்தியர் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் கிராம மக்கள் இந்த அதிசய கன்றுகுட்டியை ஆர்வத்துடன் சென்று பார்வையிடுகின்றமை குறிப்பிடத்தக்கது.