யாழில் ஆசிரியர் மீது பாடசாலை மாணவன் தாக்குதல்

90 0

யாழ்ப்பாணத்திலுள்ள கல்லூரியொன்றில் பயிற்சி ஆசிரியரொருவர் மீது மாணவன் ஒருவர் தாக்குதல் நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இன்று செவ்வாய்க்கிழமை (24) குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

குறித்த கல்லூரியில் கடந்த ஆண்டு நவம்பர் மாதமும் இதே மாணவனால் பிரச்சினை ஏற்பட்டு ஆசிரியரொருவர் மீது குறித்த மாணவனின் தந்தை தாக்குதல் மேற்கொண்டாரென தெரிவிக்கப்படுகிறது.

முன்னர் நடந்த சம்பவம் தொடர்பாக காத்திரமான நடவடிக்கை எடுக்கப்படாமை காரணமாக தொடர்ச்சியாக ஆசிரியர் மீதான தாக்குதல்கள் மேற்கொள்ளப்படுவதாகவும் இது ஆசிரியர்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும் இலங்கை ஆசிரியர் சேவை சங்கம் தெரிவிக்கின்றது.