கொழும்பு பிரதேச செயலகப் பிரிவின் ‘கொம்பனித்தெரு’ கிராம உத்தியோகத்தர் பிரிவை ‘கொம்பஞ்ஞ வீதிய’ என மும்மொழிகளிலும் அவ்வாறே அறிமுகப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.
கொழும்பு பிரதேச செயலகப் பிரிவில் ‘கொம்பனித்தெரு’ கிராம உத்தியோகத்தர் பிரிவு சிங்கள மொழியில் ‘கொம்பஞ்ஞ வீதிய’ எனவும் தமிழ் மொழியில் ‘கொம்பனித்தெரு’ எனவும், ஆங்கில மொழியில் ‘ஸ்லேவ்ஐலன்ட்’ எனவும் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
குறித்த கிராம உத்தியோகத்தர் பிரிவின் பெயர் மும்மொழிகளிலும் ‘கொம்பஞ்ஞ வீதிய’ என அறிமுகப்படுத்துவது மிகப் பொருத்தமானது என முன்மொழியப்பட்டுள்ளது.
அதற்கமைய 743/5 1992.12.01 ஆம் திகதிய அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலை திருத்தம் செய்து புதிய வர்த்தமானி அறிவித்தலை வெளியிடுவதன் மூலம் ‘கொம்பஞ்ஞ வீதிய’ என்பதை அவ்வாறே மும்மொழிகளிலும் வெளியிடுவதற்காக பொது நிருவாக, உள்நாட்டலுவலகள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சராக பிரதமர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அனுமதியளித்துள்ளது.